திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனுக்கு மலை மீது கிராம மக்கள் மோட்ச தீபம் ஏற்றினர்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
ஆனால், மாவட்டம் நிர்வாகம் தரப்பில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்நிலையில், மறைந்த பூர்ண சந்திரன் மறைவின் 30வது நாள் துக்கம் அனுசரிக்கப்படும் வகையில் திருப்பரங்குன்றம் மலை மீது கிராம மக்கள் மோட்ச தீபம் ஏற்றினர்.
















