பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வாழ்த்து
பாரத ரத்னா திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) அவர்களின் பிறந்தநாளான இன்று அன்னாருக்கு எனது சிரம் தாழ்ந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்.
திரை உலகிலிருந்து பொது வாழ்க்கை வரை எண்ணற்ற சாதனைகளைப் படைத்த திரு. எம்ஜிஆர் அவர்கள், தொலைநோக்கு சிந்தனை, கருணை உள்ளம் மற்றும் மக்கள் சேவை உள்ளிட்ட தனி அடையாளங்கள் கொண்ட தலைமைத்துவத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர்.
தமிழ் பண்பாட்டின் மீதான அவரது ஆழ்ந்த பற்றும், தமிழக வளர்ச்சியின் மீதான அவரது அளவற்ற அர்ப்பணிப்பும் மக்களிடையே இன்றளவும் பெருமையுடன் பேசப்பட்டு வருகிறது.
நேர்மை மற்றும் உயர்ந்த நோக்கத்துடன் சமூகத்திற்கு சேவை செய்ய விரும்பும் தலைமுறைகளுக்கு, திரு. எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை புத்துணர்வு ஊட்டக் கூடியதாக விளங்குகிறது.
















