நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமா் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம். கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்திக்கு இயக்கப்படும் இந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார்.
அப்போது ரயிலில் பயணம் செய்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இந்த ரயிலின் மூலம் பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறையும்.
இதில் பயணித்த அனுபவம் விமான சேவைக்கு நிகராக இருக்கும் என்றும், நீண்ட தொலைவு பயணத்தை பாதுகாப்பானதாகவும், அதிவேகமாகவும் மாற்றும் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















