குஜராத் பட்டம் விடும் திருவிழா, உத்தராயண் என அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று நடைபெறும் இந்த பட்டம் விடும் திருவிழா பிரமாண்டமான சர்வதேச நிகழ்வாக விளங்குகிறது.
அகமதாபாத் உட்பட பல்வேறு நகரங்களில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்படுவது வழக்கம். இது குஜராத்தின் கலாசாரத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே பட்டம் விடும் திருவிழாவின்போது மாஞ்சா நூல் பட்டு பறவைகள் காயமடைந்துள்ளன. குஜராத் முழுவதும் இந்தாண்டு நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழாவின்போது மாஞ்சா நூலில் சிக்கி 5 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட புறா உள்ளிட்ட பல பறவைகள் காயமடைந்தன.
கருணா அபியான் திட்டத்தின் மூலம் காயமடைந்த பறவைகளை தன்னார்வ அமைப்புகள் மீட்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
















