தமிழகத்தில் நிபா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என
சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும், சுய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழங்களை கழுவாமல் சாப்பிட வேண்டாம் என்றும், வௌவால்கள், நோயுற்ற விலங்குகளுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















