சேலம் சாமிநாதபுரத்தில் இளைஞர் தாக்கியதில் காவலர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பள்ளப்பட்டி காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுனராக பணியாற்றி வருபவர் சண்முகம். இவர், சிறப்பு உதவி ஆய்வாளர பிச்சமுத்துவுடன் வழக்கு விசாரணைக்காக சாமிநாதபுரம் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மதுபோதையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஸ்ரீநாத், சண்முகத்தின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, ஸ்ரீநாத்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















