கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், தவெக தலைவர் விஜய்யிடம் கடந்த 12 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மீண்டும் 19 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகினார். அப்போது அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கரூர் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை காண்பித்து விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















