பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? - ஆளுநர் மாளிகை விளக்கம்!
Jan 20, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டப்பேரவையில் ஆளுநரை பேச அனுமதிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. .

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் தடையின்றி பேச அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தயாரிக்கப்பட்ட உரையில் பல ஆதாரமற்ற மற்றும் வழிதவற வைக்கும் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்சினைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறப்படுவது உண்மையிலிருந்து வெகுவாக விலகியுள்ளது. முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) ஆவணங்களாக மட்டுமே உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதியே. முதலீட்டு தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்குப் போதிய ஈர்ப்பை இழந்து வருவதை காட்டுகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் மாநிலங்களுக்குள் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று ஆறாவது இடத்தைக் கூட தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் நிர்வாக அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோவில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

பண்டைய கோவில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அக்கறையின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர்கள் தீர்க்கப்படாத நியாயமான கோரிக்கைகளால் விரக்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளும் உரையில் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு, அதனை மதிக்க வேண்டிய அடிப்படை அரசியலமைப்புக் கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும், போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் காரணமாக ஓராண்டில் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், வருங்கால முதலீட்டாளர்கள் உடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், காகித அளவிலேயே உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கு எதிரான அட்டூழியங்களும், பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று தமிழ்நாடு குறிப்பிடப்படுகிறது; இது அரசாங்கத்திற்கு கவலையளிப்பதாக தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் கல்வி தரம் தொடர்ந்து சரிந்து வருவதுடன், கல்வி நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்படுவது குறித்து அரசின் அறிக்கையில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: RN Ravitamilnadu assembelyGovernor's HouseGovernor's microphone switched off
ShareTweetSendShare
Previous Post

தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!

Next Post

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

Related News

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்த இளம்பெண் – குவியும் பாராட்டுக்கள்!

ஆற்றுத்திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்து – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை!

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிராகரிப்பு – சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

விஜய் மீது அவதூறு பரப்பும் திமுக ஆதரவு ஊடகங்கள் – நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies