கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, திடீரென பலூன்களுக்கு நிரப்பப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















