கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக மேற்குவங்க மாநிலத்திற்கு செல்கிறது.
இந்நிலையில் ஜல்பைகுரியிலிருந்து, கும்பகோணம் வந்த ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் ரயில் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
















