சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினத்திற்கான 2ம் நாள் ஒத்திகை அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை காமராஜர் சாலையில் கடந்த 19ம் தேதி முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் உழைப்பாளர் சிலை அருகே 2ம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருவது போலவும், அவருக்கு வரவேற்பளித்து அணிவகுப்பு மரியாதை அளிப்பது போலவும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்று அசத்திய அணிவகுப்பு ஒத்திகைக்காக காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
















