என்டிஏ கூட்டணியில் அமமுக இணைவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தில் நல்லாட்சி உருவாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்தாக தெரவித்தார். NDA-வில் அமமுக இணைந்தது நல்லாட்சிக்கான தொடக்கம் என்றும் அவர் கூறினார்.
மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுககவுடன் பங்காளி சண்டை மட்டுமே உள்ளதாகவும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை தினகரன் தெரிவித்தார்.
















