இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் C-295 ராணுவ போக்குவரத்து விமானம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள Airbus-Tata ஆலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே ஸ்பெயின் உதவியுடன் C-295 விமானம் தயாராகிறது.
இது இந்தியாவின் Make in India திட்டத்தின் கீழ் தனியார் துறையால் தயாரிக்கப்படும் முதல் ராணுவ விமானமாகும்.
















