கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் முதலை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோதையாற்றில் முதலை இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ட்ரோன் மூலம் அதனை தேடும் பணி நடைபெற்று வந்தது. எனினும் முதலை சிக்கவில்லை.
இந்தநிலையில் நடக்கல் என்ற பகுதியில் உள்ள கோதையாற்றில், முதலை இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
எனவே முதலையை உடனடியாக பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















