கென்யா நாட்டில் கிராமப்புறங்களில் மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் கொண்டு இயங்கும் ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சாதாரண மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாக மட்டுமின்றி, அடிப்படை மகப்பேறு சிகிச்சை மற்றும் நோயாளி பராமரிப்பில் பயிற்சி பெற்ற பெண்களே இந்த ‘போடா கேர்ள்ஸ்’. இவர்களில் பலர் செவிலியர்களாகவும், சுகாதாரப் பணியாளர்களாகவும் உள்ளனர்.
இந்த போடா கேர்ள்ஸ் அமைப்பு, தொலைதூரக் கிராமங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களை மருத்துவப் பரிசோதனை மற்றும் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடுகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் இடைவெளியை, சாதாரண மோட்டார் சைக்கிள் மூலம் ஈடுசெய்யும் இந்த பெண்களின் பணி உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
















