மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இதன் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை – திண்டிவனம் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள், மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று GST சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள், திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக சென்று மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலூர் அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும் சென்னைக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கேற்ப வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும்படி போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















