கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரம், உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரமாக கண்டறியப்பட்டுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம், 2025ம் ஆண்டில் உலகின் நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நகரங்களின் சராசரி பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசல் தொடர்பாக 2025ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் சராசரி நெரிசல் அளவு 74 புள்ளி நான்கு சதவீதம் இருப்பதாகவும், சராசரியாக பத்து கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மும்பை 23வது இடத்தையும், சென்னை 32வது இடத்தையும் பிடித்துள்ளன.
















