உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா. பகலில் விவசாயியாகவும், மாலையில் புழுதி பறக்க வைக்கும் வீரராகவும் அவர் வலம் வருவது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ராவின் ஒருநாள் விடியற்காலையிலேயே தொடங்கி விடுகிறது. நாள் முழுவதும் தனது விவசாய நிலத்தில் கடினமாக உழைக்கும் அவர், மாலை வேளையில் கர்லா கட்டை சுற்றும் வீரராக உருமாறுகிறார்.
இன்றைய இளைஞர்களே தூக்க சிரமப்படும் 45 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கதாயுதத்தை, காலத்தை வென்ற ஒரு வீரனைப் போல மிக லாவகமாக சுழற்றுகிறார்.
களங்களில் ஏற்படும் காயங்கள் இவரை ஒருபோதும் முடக்கியதில்லை. மாறாக, ஒவ்வொரு காயத்திற்கு பிறகும் அதிக மன உறுதியுடன் அவர் மீண்டெழுந்துள்ளார்.
புகழுக்காகவோ அல்லது கைதட்டல்களுக்காகவோ அன்றி, தனது உடலையும் ஆன்மாவையும் வலிமைப்படுத்தவே இந்த பாரம்பரியப் பயிற்சியை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
















