மயிலாடுதுறை அருகே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள், தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்குகிறது.
இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடைய வேண்டி, மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர்
















