குடியரசு தின விழா அன்று மெரினா கடற்கரை பகுதியை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே 77ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் அன்று சென்னை பெருநகர காவல்துறை எல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெரினா கடற்கரை, மக்கள் பவன் மற்றும் முதலமைச்சர் இல்லத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் வழித்தடங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
















