கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
ராம் நகரில் வாகன உதிரிபாக விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்தின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகாத நிலையில், மின் கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் தீ விபத்து காரணமாக காட்டூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பரபரப்பும் நிலவியது.
















