ஜார்க்கண்டில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 பேரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், சரண்டா காடுகளில் கிரிபுரு என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வீரர்கள் அங்கு சென்ற போது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட் அரசு ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்த பதிராம் மாஞ்சி என்ற நக்சலைட்டு தலைவரும் கொல்லப்பட்டார்.
















