16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய ‘சின்னர்ஸ்’ திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என 16 ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்போட்டியில் போட்டியிட தேர்வாகி உள்ளது.
முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில், சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்தியாவின் சார்பில் ரேஸில் இருந்த ஜான்வி கபூரின் ஹோம்பவுண்ட் திரைப்படம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது.
















