சென்னை நுங்கம்பாக்கத்தில் கந்துவட்டி பிரச்னையால், எண்ணெய் விநியோக அலுவலகத்தை சூறையாடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் விநியோக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இவர், நந்தகுமார், புவனேஷ் ஆகியோரிடம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். வட்டி அதிகமாக இருந்ததால் அவரால் கடனை சரிவர திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நந்தகுமார், புவனேஷ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து அலுவலகத்தை சூறையாடியதாக கூறப்படுகிறது.
இதில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.
இது தொடர்பாக அலுவலக உரிமையாளர் ராஜேஷ் அளித்த புகாரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே எண்ணெய் நிறுவன அலுவலகத்தில் புகுந்த 2 பேர், ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த தொலைபேசியை உடைத்த காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை கொண்டு, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
















