மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம், மகுடஞ்சாவடி பகுதியில் திறக்கப்பட்டது.
வங்கியின் மண்டல பொதுமேலாளர் ஹரிதா பூர்ணிமா திறந்து வைத்த இந்த கிளையில், குத்துவிளக்கேற்றி சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில் கல்விக்கடனுக்காக மத்திய அரசு சார்பில் 85 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
















