மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வடக்கம்பட்டியில் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் பிரியாணி திருவிழா நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் இம்முறையும் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயிலின் நிலைமாலை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பக்தர்கள் கும்மியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது. சுவாமிக்கு படையலிட்டபின் வழங்கப்பட்ட பிரியாணியை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.
















