நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண்ணை மூளைச்சலவை செய்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்து விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது
சில மாதங்களுக்கு முன்னர் நாமக்கல், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் சுமையில் வாடுபவர்களை குறி வைத்து கிட்னி திருட்டு சம்பவம் நடந்தது
தமிழகத்தையே அதிர வைத்தது. இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னியை எடுத்துவிட்டு பேசிய தொகையை தராமல் ஏமாற்றியதாக சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் பகுதியை சேர்ந்த பிரபல ஜவுளி தொழிலதிபருக்காகவே தனது கிட்னி எடுக்கப்பட்டதாகவும் கூறி அந்த பெண் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வறுமையில் இருந்த பெண்ணை மூளைச்சலவை செய்து பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்து கிட்னி எடுத்துள்ளனர்.
கிட்னியை எடுத்த பிறகு பேசிய தொகையை தராமல் விரட்டியடித்ததாகவும், பாஸ்போர்ட்டையும் தர மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
















