பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக வரும் 27ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பாண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நடப்பாண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையொட் வரும் 27ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















