திருப்பரங்குன்றத்தில் இருப்பது சர்வே தூண் இல்லையே என நகைச்சுவையாக பேசிய உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளதாகவும், அதற்குள் தன்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் ஆன்மிகம் மற்றும் சமூக சேவை ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தாரா டிவைன் அவார்ட்ஸ் என்ற இந்த விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்னாள் நீதியரசர் வள்ளி விநாயகம், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
அப்போது பேசிய நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைமீது இருப்பது சர்வே தூண் இல்லையே என கேள்வி எழுப்பியபடி தனது உரையை தொடங்கினார்.
மேலும், தன் பதவிக்காலம் முடிவடைய நான்கரை ஆண்டுகள் இருப்பதாகவும் அதற்குள் தன்னை பதவிநீக்கம் செய்யமாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
















