கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே அவுட் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















