காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் சண்டை போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், பாரதியார் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான வாள் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெறும் மாணவ – மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு வீரர், வாள் சண்டை போட்டியை கிராமப்புற மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
















