ரீ ரிலீல்ஸ் செய்யப்பட்ட விஜயின் கில்லி பட சாதனையை அஜித்தின் மங்காத்தா படம் ஓவர்டேக் செய்துள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘மங்காத்தா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.4.65 கோடி வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.5 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் விஜய் நடித்த ‘கில்லி’ படம் ரூ.4.23 கோடி வசூலித்து அதிக வசூல் சாதனை படைத்திருந்தது.
தற்போது அந்த சாதனையை ‘மங்காத்தா’ படம் ஓவர்டேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
















