குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்.
நாடு முழுவதும் 77வது குடியரசு நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இதையொட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
குடியரசு தினத்தையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















