குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள் தேசிய கொடி நிறத்தில் ஜொலித்தன.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மூவர்ண கொடி நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பொதுப்பணித்துறை தலைமையகம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலகம் உட்பட நகரின் முக்கிய இடங்களும் மின்விளக்குகள் ஒளியில் ஜொலித்தன.
இதேபோல் சென்னை மாநகராட்சி கட்டடமும் மின்விளக்குகள் ஒளியில் பிரகாசித்தது.
மேலும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டடமும் அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
















