குடியரசு தினத்தையொட்டி பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
நயினார் நாகேந்திரன் வாழ்த்து செய்தியில் இந்தியா சுதந்திர நாடாக தனக்கென தனி இறையாண்மை, கோட்பாடு, அரசியல் சட்டம் ,கொள்கை, அரசியலமைப்பு போன்றவற்றை உருவாக்கி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் அமலுக்கு வந்தாக தெரிவித்துள்ளார்
இந்த 77வது குடியரசு தினத்தில் தமிழகத்தில் நடக்கும் கொடுங்கோல் மன்னர் ஆட்சியை முடித்து, NDA கூட்டணியின் குடியாட்சி மலர்ந்திட உறுதியேற்று,நாம் அனைவரும் பாடுபடுவோம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து செய்தியில்,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியத் திருநாட்டு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை, அதிகாரப்பூர்வமாக நாம் ஏற்றுக்கொண்ட தினம் இன்று. இந்த நன்னாளில், நாட்டு மக்கள் அனைவரிடமும், ஒற்றுமையும் சகோதரத்துவமும் மேலோங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்
















