திருவெண்ணெய்நல்லூரில் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 23ம் தேதி தனது இரு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தினார்.
அதற்கான அழைப்பிதழில் அவரது சகோதரர்கள் மற்றும் தாய்மாமன் உள்ளிட்ட பெயர்களை அச்சடித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் முறையாக அழைப்பிதழை வழங்காமல் நிகழ்ச்சி நடத்தியதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கும்பலாக சேர்ந்து ராஜ்குமார் மீது இரும்பு பைப் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.
படுகாயமடைந்த ராஜ்குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடைேய தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
















