நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தார். நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக கூறினார்.
அதேபோல் பழங்குடியின மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
















