முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.
முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தெப்பக்காடு முகாமில் யானைகள் ஒருசேர நிறுத்திவைக்கப்பட்டு, யானைகளும், பாகன்களும் தேசியக் கொடியை ஏந்தி நின்றனர்.
பின்னர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா ஷங்கர் தேசியக் கொடி ஏற்றினார். அப்போது, அனைத்து யானைகளும் ஒன்றுசேர பிளிர்ந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.
பின்னர், குடியரசு தின விழாவை முன்னிட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம், தேங்காய் போன்ற ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, முதுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள், யானைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
















