தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, கடந்த 2022இல் மீண்டும் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இருநாடுகளும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் சமநிலையானதாகவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அமையும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் உடனான உறவை வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
















