திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் பெரும் ஊழல் நடப்பதாகக் கூறி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அந்த வகையில் காயாமொழியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யாமலேயே சுத்தம் செய்ததாக மாதந்தோறும் கணக்கு காட்டுவதாகவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது நீக்குவதாகக் கூறி கையாடல் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் ஆதாரங்களுடன் வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால் இதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், செல்போனில் மூழ்கிக் கிடந்த அதிகாரியை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
















