டெல்லியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்னைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
















