டாஸ் போட்டு வென்ற இந்தியா : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? - சிறப்பு தொகுப்பு!
Jan 28, 2026, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ் போட்டு வென்ற இந்தியா : குடியரசுத் தலைவர் பயணித்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Jan 27, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சாரட் வண்டியில் பயணித்து திரௌபதி முர்மு குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். சாரட் வண்டியில் அவர் பயணித்தது ஏன்? இந்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? இந்த வண்டி எப்படி இந்தியா வசம் வந்தது?

நாட்டின் 77வது குடியரசுத் தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கடமை பாதையில் வழக்கம் போல, மிக பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவருக்கான இல்லத்தில் இருந்து திரௌபதி முர்மு, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் பயணித்தார். அந்த வண்டிக்கு முன்புறமும், பின்புறமும் குதிரை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

குடியரசுத் தலைவர் பயணித்த இந்த சாரட் வண்டிக்கென தனி வரலாறே உள்ளது. கருப்பு நிறத்தில் தங்க முலாம் பூசப்பட்ட விளிம்புகளுடன் கூடிய அந்த சாரட் வண்டி, ஆறு குதிரைகளை பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறம் சிவப்பு நிற வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டும், தேசிய சின்னமான அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டும் உள்ளது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த சாரட் வண்டி தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கொல்கத்தாவைச் சேர்ந்த Stuart & Co என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த வண்டியை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, இர்வின், லின்லித்கோ (Linlithgow), வேவல்(Wavell) போன்ற பிரபுகள் இந்த சாரட் வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பிரிட்டிஷ் இளவரசர்கள் அல்லது பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வரும்போது, அவர்கள் பயணிக்கவும் இதே சாரட் வண்டிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட்பேட்டன் தான் இந்த வண்டியை கடைசியாக பயன்படுத்திய வைசிராய்.

1947ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. அப்போது இரு நாடுகளும் நிலப்பரப்பு, ராணுவ தளவாடங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், ரயில்வே சாதனங்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்துகொண்டன.

அந்த சமயத்தில், இந்த சாரட் வண்டியை யார் எடுத்துக்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. காரணம், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுமே இந்த தங்க முலாம் பூசப்பட்ட வண்டிக்கு சொந்தம் கொண்டாடின.

எவ்வளவு பேசிப்பார்த்தும் இரு தரப்பினருமே வண்டியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. எனவே, ஒரு சுவாரஸ்யமான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாணயத்தை சுண்டி விடுவது என்றும், அதில் வெற்றிப்பெறுபவர்களுக்கு சாரட் வண்டி வழங்குவது எனவும் முடிவானது.

அதற்கான நிகழ்வில், இந்தியா தரப்பில், லெப்டினன்ட் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான் தரப்பில் சஹாப்ஸாதா யாகூப் கான் (Sahabzada Yaqub Khan) என்பவர் கலந்துகொண்டார். நாணயமும் சுண்டிவிடப்பட்டது. அப்போது, அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் இருந்ததால், சாரட் வண்டி நமது நாட்டின் வசம் வந்து சேர்ந்தது.

1950ம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் முதல் குடியரசு தின விழாவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த சாரட் வண்டியில் பயணித்தார். அன்று முதல் குடியரசு தலைவர்களின் பயணத்திற்காக இவ்வண்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், 1984ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தியாவின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதனால், திறந்த நிலையில் உள்ள இந்த சாரட் வண்டியை பயன்படுத்துவதை குடியரசுத் தலைவர்கள் தவிர்க்க தொடங்கினர். அதற்கு மாற்றாக குண்டு துளைக்காத கார்களில் அவர்கள் பயணிக்க ஆரம்பித்தனர்.

2024ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பியது. அந்த வருடம், திரௌபதி முர்மு மீண்டும் இந்த சாரட் வண்டியில் பயணித்து குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அதே நடைமுறையை அடுத்தடுத்து வந்த ஆண்டுகளிலும் பின்பற்ற தொடங்கினார். அதன்படிதான், இந்தாண்டும் குடியரசு தின விழாவில் தங்க முலாம் பூசப்பட்ட, 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Droupadi MurmuDroupadi Murmu SpeechPresidentcarriagePresident traveled
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

Next Post

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

Related News

கடலுக்கு நடுவே மர்ம பள்ளங்கள் : டிராகன் ஹோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு – 1,700 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு!

சமூக வலைதளங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கருவறை புகைப்படம் – பக்தர்கள் அதிர்ச்சி!

சீனாவுடன் ஒப்பந்தமா? – கனடா பிரதமர் விளக்கம்!

சீன அணு ஆயுத ரகசியத்தை CIA-க்கு விற்றதாக குற்றச்சாட்டு – ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி? சிறப்பு தொகுப்பு!

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது – ஐரோப்​பிய ஆணைய தலை​வர் பாராட்டு!

தேர்தலை கருத்தில் கொண்டு பரிசுப்பொருகள் – ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா மீது குற்றச்சாட்டு!

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது வெற்றிக்கான அறிகுறி – செங்கோட்டையன் பேட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies