வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து மிகவும் சக்திவாய்ந்தது என்றும், இதனால் பல்வேறு அசுர வளர்ச்சிகள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியாவுடனான உறவு எப்போதும் தொடர வேண்டும் என தாம் விரும்புவதாகவும் உர்சுலா குறிப்பிட்டுள்ளார்.
















