2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது…
முதற்கட்ட கூட்டத் தொடர் பிப்ரவரி 13ம் தேதி வரையும் 2-ஆம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி 2026- 27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவையை சுமூகமாக நடத்துவது ஆலோசிக்கப்பட்டது….
















