ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம், இந்தியாவின் ஜவுளி முதல் ஆட்டோமொபைல் வரை பல்வேறு துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐரோப்பிய யூனியன் சுமார் 6.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பங்கு தற்போது வெறும் 1.5% முதல் 2.5% வரை மட்டுமே உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் இந்தப் பங்கை பன்மடங்கு உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















