உலகின் பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி கிடைத்துள்ளது என்றும், கடந்த ஆண்டு 350 மில்லியன் டன் உணவு பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், உஜ்வாலா திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். நெல் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றும், மின் வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் பொருளாதார மந்த நிலை இருந்தபோதும் இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிராமங்களை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்துள்ளோம் என்றும், தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், கைப்பேசி உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளதாகவம் திரௌபதி முர்மு கூறினார்.
100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் நக்சல் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு சரித்திர நிகழ்வு என்றும்,
ஜிஎஸ்டி வரி மாற்றம் மூலம் நடுத்தர குடும்பத்தில் சேமிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 50,000 இருந்த ஸ்டார்ட்-அப்கள் 2 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், புதிய ஸ்டார்ட் அப்கள் மூலம் 20 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
















