பாகிஸ்தானில் கடவுள் ராமரின் மகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘ லோஹ்’ கோயில் முழுமையாக புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் கோட்டையில் உள்ள “லோஹ்” கோயில், ராமரின் இரண்டு மகன்களில் ஒருவரான லவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இக்கோயிலை புனரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கோயில் நிர்வாகம் சார்பில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இப்பணிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
















