திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 40வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முதலாவதாக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. பின்னர் 780 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர், பட்டம் வழங்கினார்.
















