அஜித் பவார் மறைவு - குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!
Sep 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு குடியரசு தலைவர்  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் பக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ள குடியரசு தலைவர், மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும், என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவருமான அஜித் பவார் விபத்தில் உயிரிழந்த செய்தி தன்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக அஜித் பவார் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். அஜித் பவாரின் மறைவு என்டிஏ குடும்பத்திற்கு மட்டுமின்றி தனக்கும் ஒரு தனிப்பட்ட இழப்பு என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் அகால மரண செய்தியைக் கேட்டு வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அஜித் பவார் என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மீதான கருணை மற்றும் பொதுச் சேவையில் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார்  துயர மரணத்தால் ஆழ்ந்த வருத்தமடைந்தாக தெரிவித்துள்ளர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அவரது பணி மகாராஷ்டிராவின் நிர்வாகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமைலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இன்று காலை விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர்  அஜித் பவார் அவர்களின் துயர மரணத்தால் நான் ஆழ்ந்த வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.

பாராமதி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஒரு அனுபவமிக்க நிர்வாகி மற்றும் ஒரு முக்கியத் தலைவர் எனறும்,  அவர் தனது வாழ்வின் பல தசாப்தங்களை பொது சேவைக்கும் மகாராஷ்டிராவின் நலனுக்கும் அர்ப்பணித்தவர். அவரது திடீர் மறைவு மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பேரிழப்பு எனறும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: ajit pawar death hindi newsajit pawar death live updateajit pawar death live updatesajit pawar plane crash deathajit pawar deathajit pawar death newsajit pawar death plane crashajit pawar death news liveajit pawar death news today
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies