ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது என கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவன வளாகத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் ரபிக் அகமது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற ஒப்பந்தம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
உலக அளவில் பல நிறுவனங்கள் இந்தோனேசியாவுக்கு செல்கின்றன என்றும், ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பல நிறுவனங்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருகின்றன எனவும் கூறினார்.
இந்தியாவில் பல பிராண்டுகள் தங்கள் காலணிகளை தயாரித்து வருகின்றன என்றும், ஆனால் இந்தியாவுக்கென பிரபலமான பிராண்ட் உலகளவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக காலணிகள் தயாரிப்பில் தமிழ்நாடு உலக வரைப்படத்தில் இடம் பிடிக்க போகிறது என தெரிவித்த அவர், கோத்தாரி நிறுவனம் இனி காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ளதாக கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் திறமையான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்க கோத்தாரி நிறுவனம் முயற்சி செய்யும் என ரபிக் முகமது தெரிவித்தார்.
















